Sponsor

Friday, November 20, 2020

உணவின்றி அறைகளில் முடங்கிக் கிடக்கும் பெருமளவான ஊழியர்கள்!!

 

 

 


கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் மேன் பவர் ஊழியர்கள் கடும் நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். நாளாந்த வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஊழியர்களுக்காக இயங்கும் அமைப்பின் இயக்குனர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலையை கணக்கிட்டால் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நிரந்தர தொழிலற்ற 30 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் 800 முதல் 1200 வரை சம்பளம் பெறுகின்றனர்.

 

எனினும் அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. தொழில் வழங்குபவர்கள் அவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதில்லை.

 

அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தொழில்களை இழந்துள்ளதுடன் இருப்பிடங்களையும் இழந்துள்ளனர். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டவுடன் அவர்கள் இருப்பிடங்களுக்கு வர வேண்டாம் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் சிலர் உணவு, நீர் இன்றி இரண்டு வாரங்கள் அறைக்ளுக்குள் சிக்கியுள்ளனர். மிகவும் மோசமான நிலைமைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

குறைந்த பட்சம் அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு உதவுமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாக பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment