Sponsor

Wednesday, November 18, 2020

கண்டி நிலநடுக்கம்- பாதிப்படைந்த தமிழ் பிரதேசம்!

  

கண்டியில் இன்று புதன்கிழமை காலை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கண்டி – திகன பகுதியிலே இவ்வாறு ஏற்பட்ட நில நடுக்கத்தினால் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்ற தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திகன பகுதியில் 9.28 அளவில் நிலநடுக்கம் பதிவாகியது.

இது ரிச்டர் அளவில் 2 தொடக்கம் 2.5 வரையான அளவில் பதிவாகியது என்று புவிச்சரிதவியல் திணைக்களம் குறிப்பிட்டது.

குறிப்பாக திகன – அம்பக்கோட்டை பிரதேசத்தில் அதிகமாக அதிர்வு ஏற்பட்டதாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அப்பிரதேசத்தில் மீண்டும் மூன்றவாது தடவை அதிர்வு ஏற்பட்டிருப்பது திகன பிரதேச மக்களை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்றது.

இதேவேளை, கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதியும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இதேபோன்று இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டு அதன் விசாரணைகள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment