Sponsor

Thursday, April 15, 2021

திடீர் திடீரென வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 309 பேர்; வெளியான காரணம்!

 


திடீர் விபத்துக்கள் காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் 309 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் 188 திடீர் விபத்துக்களே பதிவாகியிருந்தன, எனவும், இந்த முறை பதிவாகியுள்ள திடீர் விபத்துக்களில் பெரும்பாலானவை வாகன விபத்துக்கள் என அவர் குறிப்பிட்டார்.வாகன விபத்துக்கள் காரணமாக 77 பேரும், சித்திரவதை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 38 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பட்டாசு வெடிப்புக்களின் போது ஏற்பட்ட விபத்துக்கள் நான்கு மாத்திரமே பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment