Sponsor

Thursday, April 15, 2021

புதுவருட தினத்தன்று வவுனியாவில் ஐவர் கைது!

 


மது போதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் புதுவருடமான நேற்றைய தினம் 5 பேர் வவுனியா போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப் பகுதிகளில் நேற்றைய தினம் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி ஒழுங்குகளை பேணாமல் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment