Sponsor

Friday, April 30, 2021

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி... பலர் கவலைக்கிடம்: வெளிவரும் பகீர் தகவல்

 


வடக்கு இஸ்ரேலில் மெரோன் மலையின் அடிவாரத்தில் இடம்பெற்ற மத திருவிழாவில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற இந்த Lag B'Omer மத திருவிழாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த சம்பவத்தை "மிகப்பெரிய பேரழிவு" என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் துணை மருத்துவர்களும் சிபிஆரை நிர்வகிக்கும் குழுக்களின் குழப்பமான காட்சிகளை விவரித்தனர், மேலும் இச்சம்பவத்தில் குழந்தைகள் உட்பட மக்களுக்கு பெருமளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தரையில் விழுந்துள்ளனர்.


فرو ریختن پل و کشته شدن دست کم ٢۶ شهرک‌نشین صهیونیست


الجزیره تصاویر اولیه حادثه فرو ریختن پل در یک مراسم مذهبی در روستای "میرون" در غرب شهر "صفد" در شمال سرزمین های اشغالی را پخش کرد.

رسانه‌ها تعداد کشته‌شدگان را بین ٢۶ تا ٣٨ نفر تخمین زده‌اند و گفته می‌شود ١۵٠ نفر مصدوم شده‌اند pic.twitter.com/ADgr2erJIk


— خبرآنلاين (@khabaronlinee) April 30, 2021

தடயவியல் மருத்துவ நிறுவனம் தெரிவிக்கையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் அடக்கம் செய்ய விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் அமெரிக்க குடிமக்களும் அடங்குவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மீட்பு பணிதொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.   


No comments:

Post a Comment