Sponsor

Wednesday, April 28, 2021

கயிறு கைவிட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுமி!



 நீரில் மூழ்கி 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை இஸட் டீ கால்வாயில் நீராடச் சென்ற நிலையிலேயே, குறித்த 5 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை குறித்த சிறுமி கயிற்றின் உதவியுடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையில் கயிறு கைநழுவியதன் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நீரில் அடித்துச்சென்ற சிறுமியை பிரதேசவாசிகள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


எனினும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment