Sponsor

Monday, April 19, 2021

தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கான வயது வரம்பில் மாற்றம்!



ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மருந்தகம் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து கூறுகையில், ‘மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு என்ஏசிஐ ஆலோசனை வழங்குகிறது.

பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் படி அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அஸ்ட்ராஸெனெகாவுக்கான பயன்பாட்டை சரிசெய்ய முடியும்.

ஹெல்த் கனடா 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளுக்கு உரிமம் வழங்கியுள்ளது’ என கூறினார்.மிகவும் அரிதான இரத்த உறைவு கோளாறுக்கான சற்றே உயர்ந்த ஆபத்து காரணமாக, மாகாணம் முன்பு 55 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளை வழங்குவதற்கான நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைப் பின்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment