Sponsor

Thursday, April 15, 2021

பிரேத அறையில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கோவிட்டால் உயிரிழந்தவரின் சடலம்!

 


பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் 18 நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 29ஆம் திகதி 71 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலமே இவ்வாறு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த ஒட்டோபர் மாதம் 9ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கடந்த 5 மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலத்திற்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் குடும்ப உறுப்பினர்களிடம் அறிவித்த போதிலும் இதுவரையில் ஒருவரும் வருகைத்தரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment