Sponsor

Saturday, April 3, 2021

பொலிஸ் அதிகாரியால் கொடூரமாக தாக்கப்பட்ட வாகன சாரதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

மஹரகம், பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி தனக்கு என்ன நடந்தது என அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் கலைமகன் பிரவின் என்ற இளைஞனாகும். மரக்கறி விற்பனையில் ஈடுபடும் குறித்த இளைஞன் கடந்த 29ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் பண்டாரவளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார்.

அத்தோடு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியமையினால் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.மேலும் “காலை 8 – 8.15 மணியளவில் நான் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிட்டேன்.

இந்நிலையில் அங்கு நீண்ட நேரம் இருந்தமையினால் வெயில் சூடு அதிகரித்து எனக்கு தூக்கம் வந்து விட்டது. தூக்கம் காரணமாக வாகனத்தின் சக்கரம் அடுத்த பக்கம் திரும்பியமை உட்பட எனக்கு தெரியவில்லை.

மேலும் திடீரென சத்தம் கேட்டு எழுந்த போது எனது வாகனம் ஒருவரை மோதவிருந்ததனை நான் அவதானித்தேன். அப்போதே அங்கு என்னை தாக்கிய பொலிஸ் அதிகாரி இருந்தமை எனக்கு தெரியவந்துள்ளது.

இதேவேளை அவரை மோதிவிடாமல் வாகனத்தை நிறுத்தி விடுவதற்கான அடுத்த பக்கம் திரும்பும் போது மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரி மீது மோதிவிட்டேன்.

அத்தோடு விபத்தை அடுத்து வாகனத்தை நிறுத்தியவுடன் நான் வாகனத்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரி வாகன கதவை திறந்து என்னை அடித்தார்.

மேலும் வாகனத்தை விட்டு இறங்கியவுடன் மீண்டும் என்னை அவர் சரமாரியாக தாக்கினார். அத்துடன் அங்கிருந்த ஒருவரும் என்னை தாக்கினார்.

அத்தோடு பொலிஸ் அதிகாரி என்னை தாக்கும் போது தமிழன் என கூறி தகாத வார்தைகளையும் பயன்படுத்தினார்.மேலும் அதன் பின்னர் நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்” என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment