Sponsor

Sunday, May 16, 2021

வவுனியா பகுதியில் இன்னொரு பௌத்த அடையாளமாம்!

 

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்‌ பிரிவுக்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர்‌ பிரிவின்‌ கோடாலிபறிச்சான்‌ காட்டுப்பகுதியில்‌ விகாரையுடன்‌ தொடர்புடைய இடிபாடுகள்‌ உள்ளன என்று தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள்‌ திணைக்‌௧ள அதிகாரிகளால்‌ அண்மையில்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தினால் புராதன நினைவுச்சின்னம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களா இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

வவுனியா வடக்கில் உள்ள நைனாமடு கிராமத்தில் 23 சி கிராம அலுவலகர் பிரிவில் காட்டுப்பகுதியில் இந்த புரதான நினைவுச்சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

காட்டுப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் தொடர்பில் வவுனியா நெடுங்கேணி வீதியில் உள்ள 17 வது விஜயபாகு படையணி தளபதியால் வவுனியா தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரிவித்த தகவலுக்கு அமைய குறித்த பகுதி தொல்பொருள்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நைனாமடு சந்தியில் இருந்து சின்னடம்பன் ஊடாக நைனாமடு காட்டிற்கு 9.5 கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டும் 8 கற்தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அந்த பகதியில் பழைய கட்டிடங்களின் கல், ஓடுகள் 100 மீற்றர் வரையான சுற்றப்பகுதிகளில் காணப்படுவதாகவும் புதையல் தோண்டும் நபர்களால் முக்கிய பகுதி சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அங்கு காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் கி.மு.4, 8 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. வவுனியா மாவட்ட தொல்பொருள்‌ திணைக்கள அதிகாரிகளால்‌ குறித்த பகுதி அண்மையில்‌ ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. எனினும்‌ இது தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலருக்கும் எந்தத்‌ தகவலும்‌ தெரியப்‌படுத்தப்படவில்லை.

அந்தப் பகுதியை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனர் நிர்மான பணிகள் மேற்கொள்ளவுள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குருந்தனூர் மலை விவகாரம் தீராத சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கு அண்மித்த பகுதியில் புதிய விவகாரத்தை தொல்பொருள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.





No comments:

Post a Comment