Sponsor

Saturday, June 26, 2021

தமிழகத்தில் மினத்தடைக்கு அணிலே காரணம்....!

 


தமிழகம் முழுவதும் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.இதற்கு மின் தடைக்கு காரணம் என்ன? என வினவியதற்கு வித்தியாசமான பதிலை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அளித்திருந்தார்.


திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசு பதவியேற்று பத்து நாள்களில் மின்சார விநியோகத்தைச் சீரமைப்போம் என்று கூறினர்.


தற்போது பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது துறையை முழுமையாக கவனிக்காததால் இந்தத் தடை ஏற்படுகிறது.


அவர் தமிழகத்தில் மின்தடையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க) அரசு சரியாகப் பராமரிக்கவில்லை, அதனால் மின்தடை ஏற்படுகிறது என்று காரணம் கூறி, தவறான தகவலைத் தருகிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில் மின் தடைக்கு காரணம் அணில் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘’மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போல் நேரத்தில் தான் மின் தடை’’ என விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில், கரூர் கோவை சாலையில் உள்ள கரூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் சுமார் 2 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டது.


அதற்கான காரணத்தை மின் வாரிய அதிகாரிகள், மின்பாதையை நிறுத்திவிட்டு சோதனையிட்டனர்.


அதன்போதே, ​அந்த மின்தடைக்கு அணிலே காரணமென கண்டறிந்தனர். இறந்த அணிலை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் மின் இணைப்பை வழங்கினர்.


இதனூடாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கூற்றை அந்த அணில் உறுதிப்படுத்திவிட்டது.


இதேவேளை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அடிக்கடி மின் வெட்டு பிரச்சினை ஏற்பட, அணில்கள் கரண்ட் கம்பியில் தாவி சேதம் ஏற்படுத்துவதும் ஒரு காரணம் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னாலும் சொன்னார், சமூகவலைத்தளங்களில் அணில் மீம்ஸ் குவிந்து வருகின்றன.





No comments:

Post a Comment