Sponsor

Friday, June 18, 2021

தாயை கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, பல நாட்கள் சாப்பிட்ட மகன்!! நாட்டையே உலுக்கிய சம்பவம்!!

 


ஸ்பெயின் நாட்டு மக்களை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் கடந்த செவ்வாய் கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்பெயினின் Madrid-ல் மகன் ஒருவன் தாயை கொன்று சாப்பிட்டதற்காக 15 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் என மொத்தம் (15+1/2) மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை Madrid மாகாண நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, Alberto Sanchez Gomez என்ற இளைஞர், தன்னுடைய தாயை கொலை செய்து, உடலை வெட்டி, அதை குறைந்தது 15 நாட்கள் வைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

உயிரிழந்திருந்தாலும், தாயின் பெயரை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. இந்த கொடூர செயல் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்துள்ளது. 28 வயது மதிக்கத்தக்க, Alberto Sanchez Gomez, சம்பவதினத்தன்று தன்னுடைய தாயாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற, அவன் தாயை கழுத்தை நெரித்து கொன்று, அதன் பின் கத்திகளைப் பயன்படுத்தி உடல்களை துண்டு துண்டாக வெட்டி, சில உடல்களை ப்ரிட்ஜிலும், சில உடல் பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்துக் கொண்டு சென்று வெளியில் வீசியுள்ளான்.

அதன் பின் ஒன்றுமே நடக்காதது போல் இருந்துள்ளான்.

ஆனால் ஒருமாதமாக Alberto Sanchez Gomez-ன் தாயை பார்க்காததால், அந்த தாயின் நெருங்கிய தோழி பொலிசில் புகார் தெரிவிக்கவே, பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, Alberto Sanchez Gomez தன்னுடைய தாயை கொலை செய்து உடல்களை ப்ரிட்ஜில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொலிசார் அவனை கைது செய்தனர். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை துவங்கியதுஇதையடுத்து குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, கடந்த செவ்வாய் கிழமை, கொலை குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், சடலத்தை இழிவுபடுத்தியதற்காக அவருக்கு ஐந்து 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அதாவது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாதிட்ட போதும், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், Alberto Sanchez Gomez தன்னுடைய சகோதரருக்கு, 60 ஆயிரம் யூரோ(இலங்கை மதிப்பில் 1,42,85,449 கோடி ரூபாய்) இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment