Sponsor

Wednesday, June 16, 2021

யாழில் வழிதவறி பொன்னாலைக்கு சென்றிருந்த வயோதிப பெண்....!



 யாழில் வழிதவறி பொன்னாலைக்கு சென்றிருந்த வயோதிப பெண் ஒருவர் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கில் வசிக்கும் சிவபாதம் லீலாவதி (வயது-75) என்பவரே இவ்வாறு வழிதடுமாறி வந்தவராவார். குறித்த பெண் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு பின்புறமாக, கடலுக்குள் இறங்கி நின்ற நிலையில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இரு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டார்.

கௌவாட்டி எனப்படும் கடற் கற்கள் வெட்டிய சில காயங்களும் மூதாட்டியின் காலில் காணப்பட்டன. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் பொன்னாலை கிராம சேவையாளர் ந.சிவரூபன், பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அவரை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில் பொன்னாலை ஸ்ரீகண்ணன் சனசமூக நிலையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் மூதாட்டியை ஒப்படைக்கும் பணியில் இணைந்திருந்தனர்.

இதன்போது தமது இரு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கின்றனர் எனவும் தான் சொந்த வீட்டில் உறவினர்களுடன் வசிக்கின்றார் எனவும் கணவனின் ஓய்வூதியம் பெற்றுக்கொள்கின்றார் எனவும் குறித்த பெண்மணி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த மூதாட்டி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் இன்று காலை 8.00 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படதாக கூறப்படுகின்றது.  


No comments:

Post a Comment