Sponsor

Sunday, June 6, 2021

இலங்கையில் ஆபத்தில் பிரபல ஊடகவியலாளர்

 


தான் கடும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருவதாக பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவிக்கின்றார். பிரபல ஊடகவியலாளர் ஹரேந்திர ஜயலால் உடனான விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பான சலகுன நிகழ்ச்சியில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹனவிடம் கேள்விகளை எழுப்பி, பொலிஸ் ஊடகப் பேச்சாளரை நிர்க்கதிக்குள்ளாகியதாக ஊடகவியலாளர் சமுதித்த மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் பங்குபற்றிய பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியின் பின்னரே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லும் போது, பியூமி ஹன்சமாலி, பேஸ்புக் லைவ் ஊடாக, சமுதித்தவை கடுமையாக திட்டியிருந்தார்.

இந்த சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டதை தொடர்ந்து, சமதித்த சமரவிக்ரம, இன்று அதற்கு பதிலளித்துள்ளார். எதிர்வரும் சில காலத்திற்குள் தன்னை கொலை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

தனக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கி கடிதமொன்றை எழுதுவதாகவும், அதனை மிகவும் இரகசியமான இடத்தில் மறைத்து வைப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இவ்வாறு மறைத்து வைக்கும் கடிதம், இருக்கும் இடத்தை ஒருவருக்கு மாத்திரம் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பொலிஸார் மீது நம்பிக்கை கிடையாது எனவும், பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறைப்பாடு செய்ய எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment