Sponsor

Sunday, July 4, 2021

திருகோணமலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அபாயம்!

 


B.1.617.2 அல்லது ‘டெல்டா’ கொவிட் திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்டா வகை தொற்று 4 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து டெல்டா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் பிரித்தானியாவின் அல்பா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டியவில் கிட்டம்பஹுவ பகுதியில் ஒருவர் அடையாளம்

டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டு வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கொரோனா நோயாளி வெல்லம்பிட்டியவில் கிட்டம்பஹுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட 38 வயதான ஆண் நோயாளி பொரல்லையில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

“தொழிற்சாலையில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே அந்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். “நாங்கள் தற்போது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்புகளை போணியோரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.


அந்த பகுதியில் இருந்து வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். டெல்டா மாறுபாடு முதன்முதலில் தெமட்டகொட பகுதியில் கண்டறியப்பட்டது, மற்றொரு நோயாளி இதேபோன்ற தொற்றுநோயுடன் கஹதுடுவவில் கண்டறியப்பட்டார்.


மேலும், டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் COVID-19 நோயாளி, மதிவெல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது வெல்லம்பிட்டியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment