Sponsor

Monday, July 5, 2021

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.....!

 


சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, கொவிட்19 பரவல் நிலைமை மேலும் பாரதூரமாகும் அபாயம் இருப்பதாக, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.


நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார். நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத் துறைசார் 14 தொழிற்சங்கங்கள் நேற்று (05) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.சுகாதாரத்துறையில் தங்களைப் புறக்கணித்து அரசாங்கம் செயற்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.


இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியுடன் நேற்று (05) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்றும் இந்த போராட்டம் தொடரவுள்ளது.


இந்தவிடயம் இலங்கையின் சுகாதார நிலைமையையும், கொவிட் பரவல் நிலைமையையும் மேலும் அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment