Sponsor

Sunday, July 11, 2021

இலங்கையின் நிறைவடைந்து வரும் புதிய களனி பாலத்தின் நிர்மானப்பணி!

 


இலங்கையின் முதலாவது அதி உயர் தொழிநுட்ப கேபல்களின் ஊடாக அமைக்கப் பெற்றுள்ள களனிய பாலத்தின் கென்கிரீட் பாலத்தின் நிர்மானப்பணி நிறைவடைந்து அதனை இணைக்கும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


2014 ஆம் ஆண்டு மஹிந்த-ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் புதிய களனி பாலத்தின் ஆரம்பகட்ட நிர்மாணபணித்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த திட்டத்தில் ரூ. 5,500 கோடி முதலீடு செய்யப்பட்டது.


புதிய பாலம் 6 வழிப்பாதைகளைக் கொண்ட 380 மீறறர் நீளமுடையதாகவும் 27.5 மீட்டர் அகலத்தைக் கொண்டதாகவும் அமைக்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JiCA) நிதியளித்துள்ளது.


கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பமாகும் இடத்திலிருந்து பேலியகொடை பாலம் அமைந்துள்ள சந்தியைஉள்ளடக்கும் வகையில் ஆரம்பமான இந்த களனி பால வேலைத்திட்டம் ஒருகொடவத்த சந்தி மற்றும் துறைமுக நுழைவாயில் சந்தியில் நிறைவடைகிறது. 







No comments:

Post a Comment