Sponsor

Friday, August 6, 2021

வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!

 


வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பாணந்துறை, வேகட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் அவ்வீட்டினுள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த மூதாட்டி தனது வீட்டினுள் கதிரையொன்றில் விழுந்துகிடப்பதைக் கண்ட அயலவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து சடலத்தை மீட்டு பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி நேற்றைய தினமே உயிரிழந்திருப்பதகவும், உயிரிழந்தவர் 85 வயதான பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களான தம்பதியினருடைய வீட்டில் நீண்டகாலமாக சேவையாற்றி வந்துள்ள மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களான தம்பதியினர் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து கடந்த மூன்று நாட்களாக குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.


சடலமாக மீட்க்கப்பட்டுள்ள மூதாட்டியின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்த பெண்ணின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளுக்கமைய, அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவிததார்


No comments:

Post a Comment