Sponsor

Saturday, August 7, 2021

டெல்லி செல்ல தயாராகும் கூட்டமைப்பு!

 


கூட்டமைப்பின் தலைமையில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


மேலும், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பேச்சாளர் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அங்கிய குழுவினர் மட்டும் பங்கேற்பதா என்பது தொடர்பில் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.


இதேவேளை, கொரோனா நிலைமைகள் அடுத்துவரும் காலத்தில் தீவிரமடையும் பட்சத்தில் இந்தப்பயணம் தள்ளிப்போகலாம் என்றும் மேலும் அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment