Sponsor

Wednesday, August 4, 2021

மலையக சிறுமி மரணம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்வி!

 


எனது மரணத்துக்கு காரணம் என சுவரில் எழுதிய சிறுமியால் ஏன் அதன் காரணத்தை எழுத முடியாது போனது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் டயமக சிறுமியின் மரணத்துக்கு காரணமாக அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளும் பல்வேறு கருத்துகளையும் தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டு வருகின்றனர்.

மலையகத்தில் இருந்து மாத்திரமே அவ்வாறு சிறுமிகள் பணிக்கு வருவதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் இவ்வாறு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மலையகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல , நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து வறுமை காரணமாகவே இவ்வாறு வீடுகளுக்கு பணிக்குச் சென்றுள்ளனர்.

மலையக மக்கள் தரக்குறைவான எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை. தமது சொந்தக் காலில் நின்று குழந்தைகளுக்கு கல்வியை பெற்றுக் கொடுக்கின்றனர்.

ஆனால், இந்தச் சிறுமியின் மரணத்தை வைத்து பல அரசியல்வாதிகள் தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment