Sponsor

Saturday, August 7, 2021

கல்கமுவ மஹநான்னேரிய பிரதேசத்தில் உயிரிழந்திருந்த இளைஞன்....!

 


கல்கமுவ மஹநான்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த இளைஞன் இரண்டு கொலைகளை மேற்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


உயிரிழந்த இளைஞனின் கைத்தொலைபேசி இருந்த இடத்திற்கருகில் இருந்து புத்தகம் ஒன்றில் எழுதப்பட்டிருந்த குறிப்பின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.


அத்தோடு கல்கமுவ பொலிஸாருக்கு இன்று சனிக்கிழமை முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது 28 வயதுடைய பெண் அவரது 10 வயதுடைய சிறுவன் மற்றும் 28 வயதுடைய இளைஞன் ஆகியோரது சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன என தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் நேற்றிரவு வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த இளைஞன் குறித்த பெண்ணையும் அவரது பிள்ளையையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் தெரிய வந்துள்ளது.


எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் 5 வயதுடைய மற்றுமொரு பிள்ளை அயல் வீட்டிற்கு தப்பிச் சென்று உயிர்பிழைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment