Sponsor

Wednesday, August 11, 2021

சாலை விதியை மதிக்காதவரின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு....!

 


மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று அதிகாலை 3 மணியளவில் கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் பொலிஸாரின் சமிக்கையை மீறி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.


சம்பவத்தில் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய துசாந்தன் என்பவர் காயமடைந்துள்ளார்.


பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபரின் தோள்பட்டை காயமடைந்த நிலையில் , அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments:

Post a Comment