Sponsor

Wednesday, August 4, 2021

இலங்கை மக்களின் மனம் கவர்ந்த ரஞ்சன் ராமநாயக்கவின் இன்றைய பரிதாப நிலை!

 


அண்மையில் இலங்கையின் பிரபல மூத்த நடிகை ஹயசிந்த் விஜேரத்ன வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்திருந்தார்.இந்நிலையில் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.


இதன்போது அவரது கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டிருந்தமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.அத்துடன் அது குறித்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருக்கின்றது.


நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை எதற்காக இவ்வாறு தீவிரவாதியைபோல கைகளில் விலங்கிட்டு அழைத்துசெல்லப்பட்டுள்ளார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க அரசியலுக்கு அப்பால் அவர் ஓர் சிறந்த நடிகர் என்பதுடன், இலங்கை மக்கள் அனேகரின் அபிமானம் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment