Sponsor

Saturday, August 7, 2021

எரிவாயு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு....!

 


வரும் வாரத்தில் எரிவாயு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த வாரத்தினுள் சந்தையிலுள்ள எரிவாயு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார்.


லாஃப் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியதால் சுமார் 20 வீத நுகர்வோர் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் லாஃப் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தினசரி எரிவாயு சிலிண்டர் விற்பனையை 80 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண மேலும் கூறினார்.


No comments:

Post a Comment