Sponsor

Tuesday, August 10, 2021

நாட்டை முடக்குங்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது...!

  


நாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமெனில் , குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார தரப்பினர்   கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் கொவிட் தொற்றினால் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் என்பனவற்றை சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது என சுகாதார தரப்பு கூறியுள்ளது.


இதன் காரணமாக நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு வலியுறுத்திள்ளது.

No comments:

Post a Comment