Sponsor

Wednesday, March 17, 2021

கொரோனா தொற்று இரத்தத்தின் மூலமாக பரவா வாய்ப்புள்ளதா?

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் 3ம் அலை பரவும் அச்சம் எழுந்துள்ளதாக அண்மையில் சுகாதார பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இரத்தத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இரத்தத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என தேசிய இரத்த வங்கியின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.

எனவே மக்கள் நன்கொடையளித்த இரத்தம் எந்தவொரு சுகாதார ஆபத்தையும் உருவாக்காது என்றும் குறிப்பிட்டார்.

ஒருவர் இரத்தத்தை இன்னொருவருக்கு ஏற்றுவதன் மூலம் வைரஸ் தொற்று பரவாது எனவும் தொற்றுநோய்களின் போது தேசிய இரத்த வங்கி மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் மேலும் விளக்கினார்.

No comments:

Post a Comment