Sponsor

Wednesday, March 17, 2021

பிரான்சில் பரவும் புதிய உருமாறிய கொரோனா தொற்று: கண்டறிய முடியாமல் தவிக்கும் மருத்துவர்கள்

 


தற்போதைய முதன்மை சோதனைகள் அனைத்தையும் முழுமையாகத் தவிர்க்கக்கூடிய உருமாறிய கொரோனா தொற்று பிரான்சில் பரவுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக PCR சோதனைகளில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றை மிக எளிதாக மருத்துவர்கள் கண்டறிந்து வந்துள்ளனர்.

ஆனால் பிரான்சில் தற்போது புதிய உருமாற்றம் கண்ட தொற்றானது PCR சோதனைகளில் கண்டறிய முடியவில்லை என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பிரான்சில் லானியனில் உள்ள ஒரு மருத்துவமனையில், எட்டு வயதான நோயாளிகள் குறித்த விசித்திர தொற்றுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஏழு பேர்களுக்கு மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் நோய் தொற்றை கண்டறிய முடியாத நிலையில்,

ஆன்டிபாடி சோதனைகளில் மட்டுமே அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய இந்த விசித்திரமான உருமாற்றம் கண்ட தொற்றை தற்போது கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பிரெட்டன் சுகாதார நிர்வாகம் எச்சரிக்கையாக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதனிடையே பிரான்சில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தகவல் வெளிய்யிட்டுள்ளது.

கிரேட்டர் பாரிஸ் பகுதியில் மருத்துவமனைகளில் அதிகமானோர் சிகிச்சைக்கு நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில், 100,000 பேர்களில் 400 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம், சுமார் நூறு தீவிர சிகிச்சை நோயாளிகள் பாரிஸிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.

மேலும், பிரான்சில் மூன்றாவது அலை குறித்த சந்தேகத்தையும் பிரதமர் Jean Castex வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மேக்ரானின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை புதன்கிழமை கூடுகிறது.

No comments:

Post a Comment