Sponsor

Friday, March 19, 2021

இலங்கை படகுகளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை

இந்திய கடலோர காவல்படை லட்சத்தீவுளுக்கு அருகே மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, படகுகளில் இருந்து ஹெராயின், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் 1,000 துப்பிக்கி ரவைகள் என்பவற்றினை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.

இந்திய கடற்படையின் கூற்றுப்படி, கடற்படையின் ஒரு டோர்னியர் விமானம் கடந்த எட்டு நாட்களாக அரேபியா கடலில் நகர்ந்து காணப்பட்ட ஏழு இலங்கை படகுகளை கண்காணித்து வந்தது.

இதனையடுத்து விமானம் தெற்கு கடற்படை கட்டளை மற்றும் இந்திய கடற்படைக்கு கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து படகுகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கையை மேற்கொண்டது.

மினிகோய் தீவுகளுக்கு தென்மேற்கே 90 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை பிற்பகல் இப் படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், லட்சத்தீவுகள் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை மார்ச் 7 ஆம் திகதி அன்று, அங்கீகரிக்கப்படாத தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று இலங்கை படகுகள் இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன், படகில் பயணித்த 12 பேரும் கைதுசெய்யப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்கத்கது.

No comments:

Post a Comment