Sponsor

Tuesday, March 16, 2021

புர்கா மற்றும் நிகாப் தடை விவகாரத்தில் அவசரப்படமாட்டோம் என்கிறது அரசு...!

 


புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்குத் தடை விதிப்பது குறித்து அவசரப்பட்டு அரசாங்கம் எந்த முடிவுகளையும் எடுக்காது. தீவிரமாக ஆராயப்பட்டே இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரைவைக் கூட்டத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களைக் கருத்தில் கொண்டே புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முகங்களை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அனைத்துத் தரப்புக்களுடனும் ஆராய்ந்து, ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பின்னர்தான் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ரம்புக்வெல்ல கூறினார்.

இதேவேளை, புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முகங்களை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்வது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையெடுத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இந்த விடயம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

No comments:

Post a Comment