Sponsor

Sunday, February 28, 2021

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு



 நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில், கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவின் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவில் உள்ள கிவுலேகடவல வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ 12வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

அதன்படி, நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அடுத்த வாரம் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேநேரம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவெனாவிற்கும் 05 கணினிகள் வீதம் வழங்கவும் நாட்டின் அனைத்து பிரிவெனா கல்லூரி மாணவர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment