Sponsor

Sunday, February 28, 2021

கொழும்பு கட்டுநாயக்கவில் மாஸ் காட்டப்போகும் நடிகர் சிம்பு?

 


தென்னிந்திய தமிழ் திரையுலகில் பலர் பல கனவுகளோடு நடிகர்களாக அறிமுகமாகி சில காலங்களிலேயே காணவில்லை.இன்னும் சிலர் குழந்தை நட்ஷத்திரமாக சினிமாவில் ஒரு வலம் வந்தால் கூட, கதாநாயகனாக அவர்களால் ஜொலிக்க முடியவில்லை.

இப்படியான நிலையில் குழந்தை நட்ஷத்திரமாகவும் கொடிகட்டிப்பறந்து, வளர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் பட்டியலில், பல சர்ச்சைகளை தாண்டியும், இடையில் காணாமல் போய் மீண்டும் வந்தாலும் அதே ரசிகர்களின் பேராதரவுடன் இருப்பவர்தான் சிம்பு என்றழைக்கப்படும் சிலம்பரசன்.

இவர் மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சமென்பது மடமையடா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கெட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் ஒரு காட்சி விமான நிலையமொன்றில் படமாக்கப்படவுள்ளது, அதற்காக இலங்கை, மாலத்தீவு, பாண்டிச்சேரி போன்ற நாடுகளில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர், இந்த நாடுகளில் எங்கு முதல் அனுமதி வழங்கப்படுகிறது, அங்கு மாநாடு திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்படுமாம், இலங்கையில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் படமாக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன என அறிய முடிகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த தகவலை தமிழக சினிமா பத்திரிகை ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment