Sponsor

Friday, February 26, 2021

ஆட்டோவை பறிமுதல் செய்தமையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர்!

 


ஆட்டோவை பறிமுதல் செய்தமையால் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னால் குடும்பஸ்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாரதிநகரைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டிவந்த பழனிவேல் 2019 ஆம் ஆண்டு மைத்துனர் அன்னாவி பெயரில், நெல்லை ஸ்ரீ புரத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்று சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி தொழில் தொடங்கியுள்ளார்.

பதினொருமாதங்கள் 11,500ரூபாய் படி தொடர்ச்சியாக தவணை பணம் செலுத்தி வந்தவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக தவணைத் தொகையை கட்டாமல் இருந்துள்ளார்.

இதனால் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், கடந்த வாரம் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பாகத் தனியார் நிதி நிறுவனத்துக்குச் சென்று பேசிய பழனிவேலிடம், ஊழியர்கள் அவதுாறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

தொழிலுக்கு வைத்திருந்த லோடு ஆட்டோ பறிபோன சோகத்திலும், ஃபைனான்ஸ் ஊழியர்களின் பேச்சாலும் மிகுந்த மனவேதனையிலும் பழனிவேல் இருந்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை காலை ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றவர் மீண்டும் ஆட்டோவை பற்றி கேட்க ஊழியர்கள் திட்டி அனுப்பினர்.

ஏற்கனவே விரக்தி மனநிலையில் இருந்த பழனிவேல் நிறுவன ஊழியர்களின் நடவடிக்கையால் கோபமடைந்து தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வாசலில் நின்றே தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துத் தற்கொலை செய்துள்ளார்.

 

No comments:

Post a Comment