Sponsor

Thursday, March 4, 2021

கலிபோர்னியாவில் கார் விபத்தில் 13 பேர் பலி!

 


அமெரிக்க–மெக்சிகோ எல்லைக்கு அருகில் தெற்கு கலிபோர்னியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கார் மற்றும் டிரக் வண்டிகள் மோதி குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.குறித்த காரில் 8 பேர் செல்லக்கூடிய வசதியே காணப்பட்ட போதும், அதில் 25 பேர் பயணம் செய்த காரணத்தினால் குறித்த விபத்து இடம்பெறுள்ளது.

இந்த கார் டிரக் வண்டி செல்லும் வழியில் நேராக குறுக்கிட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், டிரக் வண்டி ஓட்டுநர் சிறு காயத்திற்கு உள்ளாகி உள்ளார்.சம்பவ இடத்திலேயே 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விவசாய நிலத்தில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இந்தக் கார் வண்டியில் இருந்திருப்பதாக கலிபோர்னிய நெடுஞ்சாலை கண்காணிப்புத் தலைவர் ஒமர் வொட்சன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment