Sponsor

Thursday, March 4, 2021

உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு முன்வரவேண்டும்!

 


இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு முன்வரவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பா.உஜாந்தன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில்,

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் எனப் பலரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment