Sponsor

Wednesday, March 3, 2021

குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் – அமைச்சர் டலஸ் அலகப்பெரும

 


மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரம் இல்லாத வீடுகளை அடையாளம் கண்டு, ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment