Sponsor

Sunday, March 14, 2021

இலங்கையில் தடுப்பூசி பெற்றதனினால் ஏற்டபட்ட விளைவு....!

 


இலங்கையில் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களில் இதுவரை 30 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த பால சூரிய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் கொரோனா நோயை தடுப்பதற்காக கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் சில ஒவ்வாமை தன்மைகள் குறித்து அறிக்கையிடப்படுகின்றன.

அதன்படி, 30 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டுள்ளது. அதுதவிர காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற நிலைமைகளும் காணப்படுகின்றதாகவும் அவை சாதாரணமானவை என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் இலங்கையில் பதிவான குறித்த எண்ணிக்கையானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்தளவானது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment