Sponsor

Wednesday, March 10, 2021

மட்டக்களப்பில் இளைஞர்களை பாதுகாக்கும் திட்டம்.

 


மாணவர்களை தற்காப்பு கலையில் ஆர்வத்தினை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டில் புரையோடிப்போயுள்ள இளவயது போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை செம்மண்ணோடை சோட்டாக்கன் கராத்தே மற்றும் தற்காப்புக் கலை பாடசாலையின் ஏற்பாட்டில் ஒரு நாள் கராத்தே பயிற்சி பட்டறையும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மீராவோடை அமீர்அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சவாட் சம்மேளனத் தலைவரும், சோட்டாக்கன் கராத்தே மற்றும் தற்காப்புக் கலை பாடசாலையின் பணிப்பாளருமான எம்.எஸ்.வஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பி.எஸ்.கபூர், செம்மண்ணோடை சாதுலியா வித்தியாலய அதிபர் எம்.ஐயூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கராத்தே மற்றும் சவாட் கிக்பொக்ஸிங் ஒரு நாள் பயிற்சி பட்டறை இடம்பெற்றதுடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், இறுதி நிகழ்வில் சவாட் கிக்பொக்ஸிங் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களை விளையாட்டில் ஆர்வத்தினை ஏற்படுத்துவதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள இளவயது போதைப் பழக்கத்தில் இருந்து இளையவர்களை பாதுகாக்கும் நோக்கில் குறித்த பயிற்சி பட்டறை இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சவாட் சம்மேளனத் தலைவரும், சோட்டாக்கன் கராத்தே மற்றும் தற்காப்புக் கலை பாடசாலையின் பணிப்பாளருமான எம்.எஸ்.வஹாப்தீன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment