Sponsor

Tuesday, March 2, 2021

இரனைதீவில் கடப்படை தோண்டிய குழியை மூடிய மக்கள்!



 இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கடற்படையினர் தோண்டிய குழியை அங்குள்ள மக்கள் இணைந்து இன்று மூடினர்.கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவை அரசு தெரிவு செய்துள்ளமைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினர் அரசின் இந்த முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவால் மரணிப்போரின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் அரசின் இனவெறிச் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விமர்சித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு ஏடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

இது தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவுப் பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment