Sponsor

Tuesday, February 16, 2021

ஓலை குடிசைகள் பிடுங்கி எறியப்பட்டதாக தெரிவித்து ஏ9 வீதியை மறித்து போராட்டம்!!

 


கிளிநொச்சி – பளை, கரந்தாய் பகுதியில் வசிக்கும் மக்களின் கொட்டகைகள் அடாத்தாக பிடுங்கி எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏ9 வீதியை மறித்து போ.ராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை கரந்தாய் கிராமத்தில் 1976ஆம் ஆண்டு மக்கள் குடியேறி இருந்தனர்.அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யு.த்தம் காரணமா பல்வேறு இடங்களுக்கு சென்ற மக்கள் போ.ர் நிறைவடைந்ததன் பின் 2010ஆம் ஆண்டு மீண்டும் கரந்தாய் கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

அவ்வாறு குடியேறி இருந்த மக்களை தென்னை பயிர்ச்செய்கை சபையினர் மக்கள் குடியேறி இருக்கும் காணி தமக்குரிய காணி என தெரிவித்து 2015 மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனை அடுத்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பயன் கிடைக்காத நிலையில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதன் பயனாக மக்களுடைய காணிகளை இருவாரங்களுக்குள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு பல தடவைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் மக்கள் குறித்த காணிகளுக்குள் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று அங்கு வந்த தென்னை பயிர்ச்செய்கை சபையினர் மற்றும் பளை பொலிஸார் மக்கள் கொட்டில் போட்டு குடியிருந்த வீடுகளை அடாத்தாக பிடுங்கி மக்களை தா.க்.கி.யு.ள்.ள.தா.க தெரியவருகிறது.

இதனையடுத்து சே.தமாக்கப்பட்ட கொட்டகைகள் மற்றும் தூக்கி வீசப்பட்ட வீட்டு பாத்திரங்கள் என்பவற்றை கிளிநொச்சி – கரந்தாய் ஏ9 வீதியில் போட்டு வீதியை மறித்து மக்கள் போ.ராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இப் போ.ராட்டம் காரணமாக ஏ9 வீதி சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் முடக்கப்பட்டு இருந்த நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பளை பொலிஸார் போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையாடலின்போது தென்னை பயிர்ச்செய்கை சபையினரால் சேதமாக்கப்பட்ட கொட்டகைகளை மீண்டும் போட்டு தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பளை பொலிஸார் வாக்குறுதி வழங்கியதை அடுத்து மக்கள் போ.ராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment