Sponsor

Monday, February 15, 2021

இரண்டே வார்த்தைகளில் கடிதம் எழுதி வைத்து விட்டு, பாடசாலை மாணவி தற்கொலை!

 


இரண்டே வார்த்தைகளில் கடிதம் எழுதி வைத்து விட்டு, பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் குடும்பத்தினரும், நண்பர்களும்.இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகள், 12ம் வகுப்பு படித்து வரும் நெஹ்யா என்பவரே தற்கொலை செய்து கொண்டவர்.

வெள்ளிக்கிழமை நண்பர்களை குடியிருப்புக்கு அழைத்து, தமது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடிய நெஹ்யா,அதன் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சக மாணவர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.

பொதுவாக, பகல் 7 மணிக்கு முன்னரே கண்விழித்து, அறையில் இருந்து வெளியே வரும் நெஹ்யா, சம்பவத்தன்று 9 மணி தாண்டியும் வெளியே வராதது கண்டு பயந்து போன தந்தை ஜோசப்,

கதவில் தட்டி கூப்பிட்டுள்ளார். ஆனால் கதவு திறக்க தாமதமானதும், சந்தேகம் கொண்ட அவர், அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் நபருடன் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.உள்ளே இருந்து கதவு பூட்டப்பட்ட நிலையில், மாணவி நெஹ்யா சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து மொத்தமாக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

நெஹ்யாவின் மர்ம மரணம் பொலிசாரை திணறடித்திருந்தாலும், தொடர் விசாரணையில், அது தற்கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

மட்டுமின்றி, மிக சிலரே இப்படியான தற்கொலை முடிவை எடுப்பதாகவும், நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இதேப்போன்று கேரள மாநிலத்தில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதும், பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

சிக்கிய கடிதம் ஒன்றில், நான் போகிறேன் என்பது மட்டுமே எழுதப்பட்டிருந்ததும், இதை ஒரு விசித்திர வழக்காக விசாரிக்க பொலிசாரை தூண்டியுள்ளது.

சம்பவம் நடந்த இரவு குடியிருப்பில், தந்தையும் சகோதரியும் மட்டுமே இருந்துள்ளனர். தாயார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

வகுப்பறை தேர்வில் மூன்று பாடங்களுக்கு மதிப்பெண் குறைந்து போனது, நெஹ்யாவை மனதளவில் பாதித்திருக்கலாம் எனவும்,

அதனால் ஏற்பட்ட மனக்குழப்பமே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர்.

மட்டுமின்றி, இரண்டே வார்த்தைகளில் எழுதப்பட்ட கடிதம் தொடர்பில், அவரது மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தவும் பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment