Sponsor

Thursday, March 4, 2021

செல்வி அனிசா றமேந்திரன் அவர்களின் 11வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அறநெறி பாடசாலை உபகரணங்கள் வழங்கி அறநெறி வகுப்பு ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது .....!

 


வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் ஜேர்மன் நாட்டில்  வசிக்கும் றமேந்திரன் குடும்பத்தின் நிதி பங்களிப்பில் செல்வி அனிசா றமேந்திரன் அவர்களின் 11வது பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா மாவட்டம் ஶ்ரீ நாகபூசனி அம்பாள் தேவஸ்தானத்தில் தோணிக்கல் கிராமத்தில் 75 மாணவர்களுக்கு அறநெறி பாடசாலை உபகரணங்கள் வழங்கி அறநெறி வகுப்பு ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது 




மேலும் கூறியதாவது:


இந்  நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் சர்மா அவர்களும் மன்ற தலைவர், மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆதரவுள்ள நல் உள்ளங்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வானது மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்த மன்ற உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.



அனிசா றமேந்திரன் அவர்களுக்கு எமது மன்றம் சார்பாகவும், 75மாணவர்கள் மற்றும் அதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் பிறந்தநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு சீரும் சிறப்புடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.




அதற்கான நிதி பங்களிப்பு செய்த திரு, திருமதி றமேந்திரன் கஜீனா குடும்பத்தினர்க்கு எமது மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளோடு வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொள்கிறோம்! 

                    🙏நன்றி🙏🏼

தலைவர் :

              உறுப்பினர்கள் வன்னி மண் நற்பணி மன்றம்!





No comments:

Post a Comment