Sponsor

Tuesday, March 9, 2021

கொரோனா தொற்றின் ஓராண்டு நிறைவு நாள்; பிரதமர் ட்ரூடோ விடுத்த அறிவிப்பு

உலகளாவிய தொற்றுநோயை அறிவிக்கும் உலக சுகாதார அமைப்பின் ஓராண்டு நிறைவு நாள் மார்ச் 11ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக, கனடாவில் தேசிய அனுசரிப்பு நாளாக இருக்கும் என பிரதமர் ஜஸ்டின ட்ரூடோ தெரிவித்துள்ளார்.



கொரோனா தொற்றினால் இறந்ததாக அறியப்பட்ட முதல் கனேடியரின் ஓராண்டு நிறைவை மார்ச் 8ஆம் திகதி ஒரு டுவிட்டர் பதிவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார்.


ஒரு வருடம் முன்பு, கனடாவில் கொவிட்-19 ஆல் ஏற்பட்ட முதல் மரணத்தை நாம் குறித்தோம். மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த நோய் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது என அவர் பதிவிட்டார்.


கொவிட்-19 காரணமாக இறந்த 22,000 பெற்றோர், உடன்பிறப்புகள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை நினைவுகூரும் நாள் ஒதுக்கப்படும் என்றும் ட்ரூடோ ஒரு தனி அறிக்கையில் விளக்கினார்.


இந்த நாளில், நாங்கள் இழந்தவர்களின் நினைவையும், அவர்கள் விட்டுச் சென்ற மக்களையும் நினைவுகூறுவதில் அனைத்து கனேடியர்களையும் ஒன்றிணைய அழைக்கிறேன் என்றும் பிரதமர் ட்ரூடோ கூறினார்.


முக்கிய தொழிலாளர்கள் மற்றும் வைரசுக்கு எதிரான நம் போராட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைத்து நம்ப முடியாத தியாகங்களைச் செய்யும் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் ட்ரூடோ கேட்டுக்கொண்டார்.


No comments:

Post a Comment