Sponsor

Friday, February 19, 2021

காதலுக்காக 7 கொலை; சுதந்திரத்திற்கு பின் தூக்கிலிடப்படவுள்ள ‘முதல்’ பெண்.. யார் இவள்..?



 இந்தியா சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளி ஒருவர் முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் பவன்கேதா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர்தான் சவுகத் அலி. இவரது மகள் ஷப்னம், வரலாறு மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இந்த நிலையில் தனது வீட்டுக்கு முன் மரம் அறுக்கும் தொழில் செய்து வந்த சலீம் என்பவரை ஷப்னம் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு ஷப்னம் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அடைந்த ஷப்னம் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனது காதலன் சலீமுடன் சேர்ந்து தாய், தந்தை, 2 சகோதரர்கள், சகோதரி, மைத்துனர் மற்றும் 10 வயது அண்ணன் மகன் உள்ளிட்டோரை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளால் இவள் .

இந்த நிலையில் இந்த கொடூர காதல்ஜோடியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும், 2015-ல் உச்ச நீதிமன்றமும் இருவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. தொடர்ந்தும் தற்போது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஷப்னத்தின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். இதனால் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சிறையில், பெண்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தனி அறை ஒன்று உள்ளது. இது 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளிகள் யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை. முதல் முறையாக ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment