கனடாவில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் வேறொரு பெண்ணுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த வழக்கில் முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jagtar Gill (43) என்னும் அந்த பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக Bhupinderpal Gill (40) மற்றும் அவருடன் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருந்த Gurpreet Ronald (37) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முந்தைய தீர்ப்பில் நீதிபதிகள் தவறு செய்திருப்பதாகக் கூறி, மீண்டும் விசாரணையை துவக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் தங்களுக்கு நியாயம் கிடைத்தாக நிம்மதியாக இருந்த, கொலை செய்யப்பட்ட Jagtar Gillஇன் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.
ஆனால், எதிர்பாராதவிதமாக, குற்றவாளிகளுக்கு எதிரான பல ஆதாரங்கள் புதிய விசாரணையில் கிடைத்துள்ளன.முதல் ஆதாரமாக, கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள Gurpreet Ronald என்ற பெண்ணின் இரத்தம் கொலை நடந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நடந்த வீட்டை ஆய்வு செய்யச் சென்ற Staff Sgt. Ugo Garneau என்னும் பொலிஸ் அதிகாரி, வீட்டில் ஆங்காங்கு சிறு இரத்தத்துளிகள் கிடப்பதைக் கவனித்துள்ளார்.அத்துடன், வீட்டுக்கு வெளியேயும் சில இரத்தத்துளிகள் கிடப்பதையும் அவர் கவனித்துள்ளார்.
Jagtar Gillஇன் கழுத்தும், மணிக்கட்டும் அறுக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இரத்தவெள்ளமாகத்தான் இருக்கமுடியும், ஆனால், இப்படி சிறு சிறு இரத்தத்துளிகள் எப்படி வந்தன, வீட்டுக்கு வெளியே எப்படி இரத்தம் வந்தது என சந்தேகப்பட்ட அவர், அந்த இரத்த துளிகளை சேகரித்து DNA சோதனைக்கு அனுப்பியுள்ளார்.
DNA சோதனையில், அந்த இரத்தத்துளிகள் கொலை செய்யப்பட்ட Jagtar Gillஉக்குரியவை அல்ல, அவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள Gurpreet Ronald என்ற பெண்ணுடையவை என்பது தெரியவந்துள்ளது.இதற்கிடையில், சம்பவம் நடந்த அன்று, Det. Tena Gallichon என்னும் பெண் பொலிசார் ஒருவர், கொலை நடந்த வீட்டுக்கு வெளியே ஒரு பெண்ணை சந்தித்துள்ளார்.
அந்த பெண், இவரிடம் என்ன நடந்தது என விசாரிக்க, Tenaவும், அந்த வீட்டில் ஒரு பெண் இறந்துகிடப்பதாக தெரிவித்துள்ளார்.அந்த பெண்ணும், பொலிசார் அந்த வீட்டுக்கு செல்லும்போது, அந்த வீட்டிலிருந்த குழந்தைகளை ஆறுதலாக தன்னருகே வைத்துக்கொண்டு அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது, அவர்தான் இப்போது கொலைக்குற்றம் சாட்டப்பட்ட Gurpreet Ronald என்பது பொலிசாரான Tenaவுக்கு தெரியாது.மேலும், அவசர மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடமும் ஒரு பெண் சென்று என்ன நடந்தது என விசாரித்துள்ளார்.அதுவும் Gurpreet Ronaldதான் என அந்த நபரும் சாட்சியமளித்துள்ளார். Bhupinderpalம் அவரது காதலியான Ronaldம் திட்டமிட்டு Jagtar Gillஐக் கொலை செய்துள்ளதாக அரசு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்துள்ளார்.
Bhupinderpal தன் மனைவியை தனியாக விடுவதற்காக குழந்தைகளை வெளியே அழைத்துக்கொண்டு செல்ல, அப்போது வீட்டுக்கு வந்த Ronald, Jagtar Gillஐக் கொலை செய்ததாக சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.குற்றம் செய்துவிட்டு தப்புவதற்காக மேல் முறையீடு செய்தவர்களுக்கு எதிராகவே விசாரணையில் புதிய ஆதாரங்கள் பல சிக்கியுள்ளன. அதனால் வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.
No comments:
Post a Comment