Sponsor

Wednesday, February 17, 2021

கனடாவில் தவறுதலாக கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டவர்!

 


கனடாவில் தவறுதலாக கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு நிரந்தர வாழிட உரிமம் அளிக்க நாடாளுமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Mamadi III Fara Camara என்பவர் முனைவர் பட்டம் பெறுவதற்காக கனடாவுக்கு மாணவர் விசாவில் வந்தவர்.

ஒரு நாள் பொலிசார் ஒருவரின் துப்பாக்கியை பறித்த கருப்பின இளைஞர் ஒருவர், அவரது துப்பாக்கியாலேயே அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த Camara, உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளார். அதன் பின்னர் Camara வீடு திரும்பிவிட, சிறிது நேரத்திற்குப்பின் அவரது வீட்டுக்கு பொலிசார் வந்துள்ளனர்.

அவர்தான் அவசர உதவியை அழைத்தவர் என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல், இரட்டைக்குழந்தைகளை சுமந்துகொண்டிருந்த அவரது கர்ப்பிணி மனைவி உறவினர்கள் முன், அவரைக் கீழே தள்ளி, முகத்தில் மிதித்து முரட்டுத்தனமாக அவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, ஆறு நாட்கள் சிறையிலிருந்த பின், தாக்கியவர் Camara அல்ல என தெரியவந்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரிடம் மன்னிப்புக் கோரினர்.

இந்த விடயம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கனேடிய நாடாளுமன்றம் அவருக்கு ஆதரவாக ஒரு விடயத்தை செய்துள்ளது.

அதாவது மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட Camaraவுக்கு கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் வழங்க, கனடா நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளன.

அதற்கு வழிவகை செய்யும் விதத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சட்ட திருத்தங்களையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment