Sponsor

Tuesday, March 2, 2021

500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு டார்ச்சர் – 21 வயதில் இளைஞன் செய்து வந்த மோசமான செயல் இது

 


தமிழகத்தில், பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பொலிசார் பிடித்து விசாரித்த போது, அவர் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாஸ்தி நகர் பகுதியில் வசித்து வரும் பெண்(பெயர் குறிப்பிடவில்லை) ஒருவர், தினமும் வேலை சென்று வீடு திரும்புவது வழக்கம்.

அப்படி சம்பவ தினத்தன்று அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞன், குறித்த பெண்ணின் அருகில் வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அப்பெண் உடனடியாக அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்த இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த நபர் பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் சரண் என்பதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

வெறும் 21 வயதான அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் அளித்த வாக்குமூலம் பொலிசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சரண் சிறுவயதில் இருந்தே இப்படி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளான்.

தற்போது பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் கலெக்‌ஷன் வேலை பார்த்து வருகிறார். அப்படி பணம் வசூலிக்க செல்லும் போது எல்லாம், அங்கு ஏதேனும் பெண்கள் இருந்தால் தன் சபலத்தை நிறைவேற்று வந்துள்ளான்.

ஒரு அழகான பெண் கண்ணில் பட்டால் போது, அப்படியே இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று, அவர்களிடம் அத்துமீறியுள்ளான். இப்படி பல வருடங்களாக இந்த செயலில் ஈடுபட்ட வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் இது அதிகமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களும் இதைப் பற்றி வெளியில் சொல்ல பயந்துள்ளனர். இதுவரை மொத்தம் 500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தன் சபலத்தை கொட்டி உள்ளார் சரண்.

குறைந்தது நாள் ஒன்றிற்கு 2 லிருந்து 5 பெண்கள் வரை டார்ச்சர் தந்துவிடுவாராம். இப்படி அவர் வாக்குமூலமாக கொடுக்க, பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

சரணால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பொலிசாரிடம் வந்து புகார் கொடுத்தால், அவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment