Sponsor

Sunday, May 30, 2021

48 கிலோ கஞ்சா கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது.



 யாழில் இன்று அதிகாலை 48 கிலோ கஞ்சா கடற்படை மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த திடீர் முற்றுகை பருத்தித்துறை கடற்பரப்பில் இடம்பெற்றது.

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளும் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள் இரண்டும், கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகும் படையினரால் கைபற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment