Sponsor

Thursday, May 27, 2021

தீப்பற்றிய சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் உயிரிழக்கும் மீன்கள்!



 கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் - பிரஸ் பேர்ள் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீப்பற்றிய கப்பலின் இரசாயனங்கள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.

இதேவேளை கப்பலில் இருந்து ரசாயனங்கள் கலந்த உடைவுகள் வெளியேறினால் அது உயிரினங்களின் இறப்புக்களுக்கு காரணமாக அமையலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள பகுதியில் மீன்பிடி நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தலைவர் பேராசிரியர் ஏ.நவரத்னராஜா தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment