Sponsor

Thursday, May 27, 2021

வவுனியாவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்கள் கைது

 


வவுனியாவில் மூன்று ஆலயங்கள் உட்பட 7 இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 5 இளைஞர்கள் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் படிவம் 4 பிள்ளையார் ஆலயம், பாவற்குளம் படிவம் 5 அம்மன் ஆலயம், பாவற்குளம் பகுதியில் உள்ள தோட்டக்காணி, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3 வீடுகள் என்பவற்றில் கிணற்றில் நீர் இறைப்பதற்காகப் பொருந்தப்பட்டிருந்த மோட்டார்கள், ஒலிபெருக்கியின் சாதனங்கள் என்பன திருடப்பட்டிருந்தன.

அத்துடன், பூவரசன்குளம் முருகன் ஆலயத்தின் உண்டியலும் திருடப்பட்டிருந்தது.

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்ற குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய தலைமையில் பொலிஸ் பரிசோதகர் ஜெகத், உப பொலிஸ் பரிசோதகர்களான ரத்னாயக்கா, தினேஸ்கரன், பொலிஸ் சார்ஜன்ட் ஹெட்டியாராட்சி (60588), பொலிஸ் கான்டபிள்களான ரத்னாயக்கா (67428), பிகரடோ (90891), ஜெயரலோன் (68992), ரணசிங்க (14926), சமரக்கோன் (60405), திஸநாயக்கா (86787) ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சம்பவம் தொடர்பில் தாலிக்குளம், பாவற்குளம், குருக்கள் புதுக்குளம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 19, 23, 25 வயது இளைஞர்கள் 5 பேரை பூவரசன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 6 நீர் இறைக்கும் மோட்டார்கள், 2 ஒலிபெருக்கி சாதனங்கள், 1 மைக், ஆலய உண்டியல் என்பவற்றை மீட்டுள்ளதுடன், திருட்டு சம்பவத்தின் போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment