Sponsor

Saturday, May 29, 2021

பொலிஸாரைத் தாக்கிய கடத்தல்காரர்கள்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு....!

 


அநுராதபுரம் -பரசன்கஸ்வௌ பகுதியில் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை கடத்தும் நபர்களை கைது செய்வதற்காக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோத்தர்கள் இருவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஆகியோரை தாக்கியமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.

குறித்த நபர்கள் இருவரும் , எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பரசன்கஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலேவ பகுதியில் அதிகாலைவேளையில், சட்டவிரோதமான முறையில் கால்நடைகள் கடத்தப்படுவதாக , அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொலிஸாருக்கு தகவல் வழங்கி நபரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் , அங்கிருந்த கடத்தல்காரர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் , தகவல் வழங்கிய நபரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் , தகவல் வழங்கிய நபரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment